பெரம்பலூர், செப்.12 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட 7 ஆவது மாநாடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கே.ஜி.எம் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.முக மதுஅலி துவக்க உரை ஆற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.செல்லதுரை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், விசிக விவசாய அணி வீரசெங்கோலன், கவிஞர் எட்வின், திமுக விவசாய அணி எஸ்.தங்கராசு மற்றும் எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகி யோர் வாழ்த்துரை ஆற்றினர். விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன் நிறைவுரை ஆற்றினார். பச்சைமலை கல்லாறு, சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடி யாக துவக்க வேண்டும். சிறப்பு பொரு ளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை விவசா யிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்டத் தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளிப் பூங்கா, வேளாண் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் இலவச மின்சார பறிப்பு சட்டத்தை கைவிட வேண்டும். தோட்டக் கலைத்துறை மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கிட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 5ஆயிரம் விலை யும், பால் ஒரு லிட்டருக்கு ரூ.10 என உயர்த்திட வேண்டும். முசிறியிலிருந்து துறையூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தின் புதிய தலைவராக என்.செல்ல துரை, செயலாளராக ஏ.கே.ராஜேந்திரன், பொருளாளராக சக்திவேல் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.