districts

img

டாஸ்மாக் சங்க மத்திய சென்னை மாவட்டக்குழு உதயம்

சென்னை, அக். 19 - டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட  டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டக்குழு அமைப்பு மாநாடு புதனன்று (அக்.19) புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சமவேலைக்கு சம ஊதி யம் என்ற அடிப்படையில் அரசு ஊழியர்க ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 40 விழுக்காடு போனஸ் வழங்க  வேண்டும், ஊழியர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.சுந்தரம் தலைமை தாங்கினார். இ.அன்பு கொடியேற்ற, எஸ்.பூராசாமி வரவேற்க, ஆர்.விஜயகுமார் அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து டாஸ்மாக் மாநில சம்மே ளன பொதுச் செயலாளர் கே.திருச்செல் வன் பேசினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சந்தானம், டாஸ்மாக் சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் கே.பி.ராமு ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை நிறை வுரையாற்றினார். பி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக பி.சுந்தரம், செய லாளராக எஸ்.பூராசாமி, பொருளாளராக பா. வடிவேலு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

;