districts

தமுஎகச கலை இலக்கிய 

2022ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும் படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் இரண்டு பிரதிகள் 2023 மார்ச் 15ஆம் தேதிக்குள் அஞ்சல்/தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,  
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 

குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.  தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத் தொகை ரூ.10,000/, சான்றிதழ் ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.

விருதுகள்
1.    தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல்
2.    கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்
3.    சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 
4.    இரா.நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 
5.    வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 
6.    அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 
7.    வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு
8.    இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது: குழந்தைகள் இலக்கிய நூல்
9.    கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 
10.    பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 
11.    என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்
******

பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   
12.    மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: 
நாட்டுப்புறக் கலைச்சுடர்
13.    மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்
14.    த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்
15.    மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை
******
வாழ்த்துகளுடன்
மதுக்கூர் இராமலிங்கம் மாநிலத்தலைவர் 
ஆதவன் தீட்சண்யா பொதுச்செயலாளர்
15.02.2023