கோவை, ஜன.6- கோவை ராமநாதபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சூயஸ் நிறுவனம் குடிநீர் தொட்டி அமைக்க மைதா னத்தை சூறையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவி ரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்காக ராமநாதபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதா னத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற் காக மரங்கள் வெட்டப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மைதானத் தில் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் தலை மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக பள்ளி மைதானத்தை கையகப்படுத்திய மாநகராட்சியை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் குடி நீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.