சென்னை, ஜன.7- சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையுடன் இணைந்து இதயநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்பட விழாவை நடத்தியது. ‘டோபமைன் டெவில்ஸ்’ என்னும் குறும் படம் முதல் பரிசை தட்டிச் சென்றது. இளைஞர்களிடையே இதய ஆரோக்கி யத்தின் முக்கியத்துவத்தை வெளிப் படுத்துவதில் இதைதயாரித்தவர்களின் அற்புதமான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிக்காக இந்த விருது வழங்கப் பட்டது. இதே போன்று ‘விழித்துக்கொள்’ மற்றும் ‘லைப்ஸ்டைல்’ ஆகியகுறும்படங் கள்முறையேஇரண்டு மற்றும் மூன்றாம் பரிசைப்பெற்றன. இந்த விருதை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 3 மாணவர்களுக்கு புகழ்பெற்ற திரைப்படஇயக்குனர் வெற்றி மாறன் வழங்கினார். முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ. 50 ஆயிரம் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ பிரச்சாரம் குறித்த இதழையும் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இங்கு நான் பார்த்த படங்கள் அனைத் தும் மிகவும் அற்புதமானவை. அவை உண்மையில் இளைஞர்களின் வாழ்க்கை யில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இன்றைய காலக்கட்டத்தில் இதய ஆரோக்கி யம் குறித்த விழிப்புணர்வை இளைஞர் களிடம் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையின் ஒருங்கிணைப் பாளர் பி. நித்யா பேசுகையில், இளை ஞர்களிடையே ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே திரைப்பட விழாவின் நோக்கம் என்றார்.