districts

மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

திருத்தணி,ஆக 1-

     திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வர் ஏழுமலை. அவரது மகன் பிரவீன்குமார் (11). இவர், பொதட்டூர்பேட்டை அருகே உள்ள பாண்டறவேடு கிராமத்தில் உள்ள புனித இதய மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் மாண வன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலை யில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  பெற்றோர் பள்ளி யில் வலுக்கட்டாயமாக விட்டு வந்தனர். இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் பிரவீன் குமார் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாத நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.