districts

img

ஐசியூ படுக்கையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ! காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பொதுமக்கள் சேவை பாதிப்பு…

சென்னை,ஜூலை 10- வடசென்னை  வாழும் ஏழைமக்க ளுக்கு மருத்துவ சேவையாற்றுவதில் 200 ஆண்டுகால அனுபவமும் பெற்ற மருத்துவமனை ஸ்டான்லி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யாகும்.  ஆசியாவிலேயே பழம்பெரு மையும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவனையாக கருதப்படும் இந்த மருத்துவமனையில்  அனைத்து  பிரிவுகளிலும் போதிய அளவு ஊழி யர்கள் பற்றாக்குறை இருப்பதால் மக்கள் சேவையில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துமனை வரலாறு…
நோய்வாய்பட்ட ஆங்கிலே யேருக்கு சிகிச்சை அளிப்பதற் காக கிழக்கிந்திய கம்பெனியை  சேர்ந்தவர்களால் துவக்கப்பட்டது தான் இந்த மருத்துவமனை. கைநாட்டு  வைத்தியம் பார்த்த வந்த மதராஸ் மக்களுக்காகவும் வெள்ளை யர்களுக்காகவும் தொடங்கப்பட்ட இந்த நவீன மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடிய 1782 ஆம் ஆண்டில் ராயபுரத்தில் உள்ள மணியக்காரர் என்ற செல்வந்த ரால் இங்கு சத்திரம் கட்டி அதில்  கஞ்சி தொட்டியை அமைத்து  ஏழைகளுக்கும், வழிப்போக்கர்க ளுக்கும் உணவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சிதொட்டிதான் 1799ல் ஜன் அண்டர்வுட் என்ற மருத்துவரால் மருத்துவமனையாக மாறியது. 1808ஆம் ஆண்டில் ஆங்கில அரசு  ஏற்று நடத்தியது. ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933ல் முதன் முதலாக ஐந்துவருட மருத்துவ படிப்பு துவக்கப்பட்டது. 1936 ஜூலையில் தான் மருத்து வக்கல்லூரி துவக்கப்பட்டது. தற்போது 1661 படுக்கைகள் , 61மருத்து வர்கள் , 332 செவிலியர்கள் 1600  உள்நோயாளிகளும், 5000 ஆயிரம்  வெளிநோயாளிகளை கொண்ட இந்த பிரம்மாண்டமான மருத்துவனை யில் ஒருசில மருத்துவ பிரிவுகள்  மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு ரத்தமும் சதையு மாக ஏராளமானோர் அழைத்துவரப் படுகின்றனர். கையிலும், காலிலும்  இரும்பு நட்டு, போல்டு பொருத்தப் பட்ட நோயாளிகளை படுக்கையி லும் தள்ளுவண்டியிலும் நகர்த்தி  செல்லும் பரிதவிக்கும் காட்சியை அங்கு காணமுடிந்தது விபத்து, தற்கொலை முயற்சி, அறுவை சிகிச்சையின்போது மரணத்தின் விளிம்பிலிருந்து மனிதர்களை காப் பாற்றும் மருத்துவர்களை கடவுள்  நம்பிக்கை உள்ளவர்கள் தெய்வத்  திற்கு சமமாக கருதுகின்றனர்.

சாதனைகள்
ஸ்டான்லி மருத்துவமனை உலகிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி அறுவைசிகிச்சையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டியைச்சேர்ந்த ஒருவர் குடல் அழுகிய நிலையில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயராமையா என்ற அந்த நோயாளிக்கு நவீன முறை யில் சிகிச்சை அளித்து அவரது உயிரை  இந்த மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.  இந்த மருத்துவனையில் கடந்த  ஆண்டில் மட்டும் 77 பெருந்தமனி  அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன.  அவற்றில், 15 திறந்த பெருந்தமனி அறுவை சிகிச்சைகளும், 18 திறந்த `இலியாக் ‘ அறுவைசிகிச்சைகளும் மற்றும் 44 நுண்துளை அறுவை சிகிச் சைகளும் அடங்கும். இவை அனைத்தும், உலகத் தரத்துக்கு இணையானது என்பதில் மிகை யல்ல. 52 வயது ஆண் ஒருவருக்கு கல்லீரல் செயலிழந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது உயிரை காப்பாற்றியதும் இந்த மருத்துவ மனை தான்.   இதுவரை 81க்கும் மேற்பட்ட உடல்  உறுப்புகளை தானமாக பெற்று,  பலருக்கு உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு  உள்ளது. 2005ஆம் ஆண்டு திண்டுகல் மாவட்டத்தைசேர்ந்தவர் நாராயணசாமி என்பவர் கட்டட  வேலையின்போது உயர்மின் அழுத்த கம்பியில் தவறுதலாககை வைத்து இரண்டு கைகளை இழந்தார்.  இவருக்கு இதே மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 13 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புதிய கையை பெற்றார். நாகபட்டினத்தை சேர்ந்த தருண் என்ற பத்துவயது சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய பட்டன் பேட்டரியை வெற்றிகரமாக அகற்றி அவனது உயிரை காப்பாற்றியதும் இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தான்.

புதிய நியமனம் இல்லை
ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தான் தற்போது போதிய ஊழியர்களின் நியமனம் செய்யாமல் உள்ளது. இதனால் மருத்துவம், பராமரிப்பு,  சேவையில் தொய்வு ஏற்படுள்ளது. மருத்துவர்கள் , செவிலியர்கள் பணியிடங்கள் ஓரளவு நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில்  மருத்துவ பயிற்சி மாணவர்களை கொண்டு தட்டுப்பாட்டை ஈடுசெய்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுமார் 1300 பணியிடங்களில் 485 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு துரித மருத்துவம் வழங்கவேண்டும் என்ற அரசின் நோக்கம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

152 செவிலியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 25 செவிலியர்கள்?
குறிப்பாக இரண்டாம் நிலை  செவிலியர்கள் 153 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 25 பேர் மட்டுமே இருப்பதாகவும், சமூக  பணியாளர்கள் 13 பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருபணியாளர் மட்டுமே உள்ளனர். கிளார்க் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் 11  பணியிடங்கள், எலக்ட்ரிசியன் 4, டைப்பிஸ்ட் 5, மெக்கானிக் 4, சமையலர் 10, இசிஜி ஆபரேட்டர் மற்றும் டெக்னிசியன் 6, மருந்தா ளுனர் 14, லேப்டெக்னிசியன் 3,  பிரிட்ஜ்மெக்கானிக் 5, சமூகநலப் பணியாளர்கள் 3, வரவேற்பாளர் 2,  வாகன ஓட்டுநர், கிளீனர், அமரர்  ஊர்தி உதவியாளர்கள் 5, ஸ்டாப்நர்ஸ் 10, ஓஏ மற்றும் வார்டுபாய்  20, பிளம்பர் 2, டெய்லர் 3,  அறுவைசிகிச்சை கூட உதவி யாளர்கள் 13, ஹவுஸ் கீப்பர் 3, சலவையாளர் 6, பெண் தூய்மை தொழிலாளர்கள் 41, ஏசி மெக்கானிக், உதவியாளர் 4 மருத்துவம் சாரா உதவியாளர்கள் 3 பேர் மற்றும் பேச்சுக்கலை வல்லுனர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், அலுவலக கண்காணிப்பாளர், பிஸிசியன், டெண்டல் மெக்கானிக், ஆசிரியர்கள், தச்சர், பெயிண்டர், உள்ளிட்டவர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன.

அரசுத்துறையில் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை இடமாற்றம் என்பது அரசு விதி என்றாலும் இந்த  மருத்துவமனையில் மருந்துகொள் முதல் பிரிவில் சில அதிகாரிகள் பல  ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி யாற்றும் நிலை உள்ளது.  அவசர சிகிச்சை பிரிவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டி ருந்த நடுத்தர வயது கொண்ட ஒரு பெண்மணியிடம் பேசியபோது, விபத்தில் பாதிக்கப் பட்ட தன் உறவினரை அனுமதிக்க மருத்துவமனை வந்ததாகவும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் நோயாளிகளை உடனே கவனிப்பதாகவும் தனியாக அழைத்துவரும் நோயாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறினார்.  எழுதப்படிக்கத்தெரியாத ஒரு  அட்டென்டர் (நோயாளியின் உதவியாளர்) இந்த மருத்துவ மனையில் சேவை செய்வது கடினமாக உள்ளது, மருத்துவமனையில் ஆண்,  பெண் உதவியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால் இருக்கும் ஊழியர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. இதனால் மக்க ளுக்கு சேவையில் குறைபாடு ஏற்படு கிறது. அறுவை சிகிச்சை மற்றும் பிரசவ வார்டில் சுகாதார சீர்கேடு இருப்பதாக அவர்கூறினார். வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் அரசு மருத்துவமனையை நம்பி சென்னையில் குறிப்பாக  வடசென்னையில் லட்சக்கணக் கானோர் உள்ளனர். எனவே ஸ்டான்லி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் உள்ள காலியிடங்களை விரைந்து நிரப்பி மக்களுக்கு மருத்துவ  சேவைகள் அனைத்தும் தடையின்றி  கிடைப்பதை மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தவேண்டும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

 (குறள் - 948) - ம.மீ.ஜாபர்