தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.டி.அரசு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி நாகமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.