districts

சென்னை முக்கிய செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு   சிற்றுண்டி : மாநகராட்சி முடிவு

சென்னை, டிச. 29 - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10, 11,  12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்  வெள்ளியன்று (டிச.29)  மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் 10, 11,  12ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு மாலை நேர சிறப்பு  வகுப்புகள் நடத்தப்படு கிறது. எனவே, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 81  பள்ளிகளில் உள்ள 18  ஆயிரத்து 397 மாண வர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி (சுண்டல்) வழங்கப்படும். இதற்காக 1.20 கோடி ரூபாய் ஒதுக்கி  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை, கோயம்பேட்டில் உள்ள  அவரது கட்சி அலுவலகத் தில் அடக்கம் செய்ய அனு மதி அளிப்பது உள்ளிட்ட 39 தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தர்காக்கள் பராமரிப்புக்கு நிதியுதவி

வேலூர், டிச.29- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை அடங்கிய வேலூர் சரகத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் கீழ் 21 பள்ளிவாசல் மற்றும் தர்காக்கள் உள்ளது.  அதன் பராமரிப்பு பணிகளுக்காக நிதி உதவி வழங்கும் விழா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 24 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலம் முழுவதும் 143 பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை  சீரமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் நல வாரியம் மூலம் 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப் புறத்தில் வசிக்கும் வீடற்ற சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”  என்றார்.

திருநங்கையர் முன்மாதிரி விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணிப்பேட்டை, டிச.29 -  தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ், திருநங்கையர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் வழங்கப்படும் முன்மாதிரி விருதுக்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது பெறும் திருநங்கையருக்கு ரூ.1 லட்சத்திற்கு  காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது. இவ்விருதுக் கான விண்ணப்பத்தை  awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஜனவரி 25 ஆம் தேதியாகும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம் 4 வது தளம் ‘சி’ பிளாக்கில் நேரடியாக அளிக்கு மாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு  200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், டிச.29 - ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். வார இறுதி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி  வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.29, 30) ஆகிய தேதிகளில்  சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர்,  வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம்  கோட்டம் சார்பில் சென்னையில் இருந்து இரு நாட்களி லும் 200 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

விழுப்புரம் - திருப்பதி ரயில் காட்பாடி வரை செல்லும் 

விழுப்புரம், டிச.29 - விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதி வில்லா விரைவு ரயில் பொறியியல் பணி காரணமாக ஜனவரி 28 ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்படு வதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்-தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தெற்கு-மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதி வில்லா விரைவு ரயில் (வண்டி எண்: 16854) காட்பாடி-திருப்பதி இடையே ஜனவரி 28-ஆம் தேதி வரை பகுதி யளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில் காட்பாடியில் நிறுத்தப்படும். இதேபோன்று திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்: 16853) திருப்பதி - காட்பாடி இடையே ஜனவரி 28-ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரிவாள் மூக்கு திட்டத்திற்கு ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு 

சிபிஎம் வரவேற்பு

கடலூர், டிச.29 - கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடி மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஓடும் பரவனாற்றில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பு களை குறைக்கும் வண்ணம் ஆற்றின்  குறுக்கே அரிவாள் மூக்கு என்ற  இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டுதல் மற்றும் கடலுக்கு புதிதாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெய் வேலி சுரங்கத்தில் இருந்து வெளி யேற்றப்படும் சுரங்க நீர் மற்றும் மழை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும்  மழை நீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் பரவனாறு மேல் பரவனாறு, நடு பரவனாறு மற்றும் கீழ் பரவனாறு என மொத்தம் 58.80 கி.மீ. தூரம் பயணித்து அரிவாள் மூக்கு வழியாக சென்று கடலூர் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது. வெள்ள காலங்களில் குறிப்பாக  35.00 கி.மீ தூரம் உள்ள கீழ் பரவனாறு தனது புவியியல் மற்றும் இடவியல் காரணமாக குறைந்தபட்ச சமன் மட்டம்  உள்ளதால் இந்த ஆறு வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள் வெள்ள நீரில் மிதந்து பாதிப்படைவது, ஆற்றை சுற்றியுள்ள சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி  பாதிப்படைந்து வருவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. மேலும்  கடல் நீர் பின்னோக்கி வந்து சுமார் 25.00 கி.மீ தூரம் உப்பு நீராக  மாற்றி விவசாயம் செய்ய இயலாத சூழல் இருந்து வந்தது. இவ்வாறு ஏற்படும் வெள்ளப் பெருக்கை விரைவாக கடலில் வடிய  வைக்கும் பொருட்டு அருவாமூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டவும், மேலும் மேற்படி இடத்திலிருந்து 12.00 கி.மீட்டர் தூரம் சென்று ஆறு கடலில் கலப்பதை தவிர்த்து 1.60 கி.மீ., தூரத்தில் அருகாமையில் உள்ள கடலில் வெள்ள நீரை வெளி யேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் திட்டமிடப் பட்டது. மேலும், இத்திட்டம் செயல் படுவதற்கான நில ஆர்ஜித பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், சட்டமன்ற, மக்களவை உறுப்பின ர்கள் தொட ர்ந்து கோரிக்கை வை த்தனர். இந்த நிலையில், வேளாண்மை  உழவர் நலத்துறை அமைச்சர்,   முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இத்திட்டத்திற் கான நிதி ஒதுக்கீடு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  அதன் அடிப்படையில் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ்  ரூ.81.12 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இத்திட்டம் முடிக்க ப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோ. மாதவன் இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கூறுகை யில்,“ குறிஞ்சிப்பாடி, கடலூர் வட்டங்களில் வெள்ளக் காலங்களில்  போது பரவனாற்றில், என்எல்சி உபரி நீரால் மிகப்பெரிய அளவில் இழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.  இதை தடுக்க அரிவாள் மூக்கு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். இந்த நிலையில், அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தை சிபிஎம் சார்பில் வரவேற்கிறோம். மேலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்  என்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.