சென்னை, ஜூலை 3- மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி முகமது இம்ரான் (30) என்ற பயணியின் உடைமைகளில் சோதனை யிட்டனர். அதனுள் 11 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, தங்கப் பசை இருந்தது.இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இம்ரானை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 2 கிலோ 137 கிராம் என்பதும், இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 98.55 லட்சம் என்பதும் தெரியவந்தது.