districts

சென்னையில் 3 இடங்களில் பாட புத்தகங்களை பெறலாம்

சென்னை,மே 26- சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 9 ஆயிரம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் பாட புத்தகங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 இடங்களில் பள்ளி பாட புத்தகங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமணி பாட நூல்-கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் ஆகிய இடங்களில் பாட புத்தகங்களை பெறலாம்.

;