districts

img

அத்தியாவசிய பொருட்கள் வழங்காத ரேசன் கடை முற்றுகை

சிதம்பரம், ஜூன் 17- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது சாத்தா வட்டம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்குவது இல்லை. கடையும் முறையாக திறப்பது இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு இதுவரைக்கும் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், கோப டைந்த  பொதுமக்கள்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டச் செய லாளர் வெற்றிவீரன், கிளைச் செயலாளர் காசிராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்  இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரி, அனைவருக்கும் ரேசன் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிகை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.