விழுப்புரம், ஜூன் 9-
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ (23). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.
இந்நிலையில் யுவஸ்ரீ-க்கு வெள்ளியன்று (ஜூன் 9) திருமணம் நடைபெற்றது. அதே சமயத்தில் கல்லூரியில் தமிழ் பருவத் தேர்வும் நடந்தது. இதனையடுத்து, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மணக்கோலத்தில் கல்லூரிக்கு வந்து யுவஸ்ரீ பருவத் தேர்வு எழுதினார். அவரை, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர். தேர்வு எழுத வந்த மாணவி யுவஸ்ரீயை, அவரது கணவர் மணக்கோலத்தில் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.