கள்ளக்குறிச்சி, ஜன.22 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களமருதூர். இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது. இதனால் ஓராண்டிற்கு மேலாக தெருக்களில் ஆங்காங்கே சாக்கடை நீர் குட்டை போன்ற தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீர் கலப்பதால் எந்த நேரமும் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட இரண்டு தெருக்களுக்கும் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டுக்கொள்ள வில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.