பராமரிப்பு பணிகளால் 5 ரயில்களின் சேவையில் மாற்றம்
விழுப்புரம், செப்.4- பராமரிப்பு பணிகள் காரணமாக 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) வருகிற 6, 9 ஆம் தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதிய ளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப் படும். அதுபோல், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) 6, 9- ஆம் தேதிகளில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படு கிறது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலை யத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும். விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) 6, 9 ஆம் தேதிகளில் 25 நிமிடங்கள் தாமத மாக மாலை 3 மணிக்கு புறப்படும். மேலும் குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருப்பதி- காட்பாடி இடையேயான பகுதி களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, விழுப்புரத்தில்இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருப்பதி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16854) 7, 8, 9 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16853) 7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பதி- காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், செப்.4- விழுப்புரம் ரயில் நிலை யம் முன்பு , கடந்த செவ்வாய்க்கிழமை தட்சிண ரயில்வே எம்ப்ளா யிஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் - ஓப்பன்லைன் கிளை செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் சிவக்குமார்,சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு போனஸ் தொகை யை உயர்த்தி வழங்க வேண்டும், ரயில்வேக் குள்ளும், கோட்டத்திற் குள்ளும் இடமாறுதல் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் உதவி கோட்டச் செயலாளர்கள் சாய்சார்லஸ், வேந்தன், அழகிரி, உதவி கோட்ட தலைவர் பலராமன், ஓப்பன் 5 லைன் கிளை தலைவர் கமலக்கண்ணன், தலைமை கிளைத்தலைவர் செல்வம் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.முடிவில் தலைமை கிளைச் செய லாளர் வீரராகவன் அனை வருக்கும் நன்றி கூறினார்.
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடம்
சுங்குவார் சத்திரம் வரை ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு
சென்னை, செப்,4- பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித் தடத்தில் முதற்கட்டமாக சுங்குவார் சத்திரம் வரை பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.முதல் கட்ட மாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ பணி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக் காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு மொத்தம் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள நிலையில், பணிகள் பின் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன: சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறு சீரமைப்பு: ரூ.16 கோடி. வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள் : ரூ.13.40 கோடி. இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது.
கடலூர் அருகே கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து!
கடலூர், செப்.4 - கடலூர் - புதுச்சேரி எல்லையில் புதுக்கடை என்ற தமிழக பகுதியில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தேங்காய் மட்டைகள் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த தேங்காய் மட்டையில் இருந்து தேங்காய் பஞ்சுகள் உற்பத்தி செய்வதும் அந்த பஞ்சில் இருந்து கயிறு உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை (செப்.4) பிற்பகல் திடீரென அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் பஞ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ மளமளவென பரவி அருகில் இருந்த தேங்காய் மட்டைகள் மற்றும் கயிறு, கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. கடலூர் மற்றும் புதுவைபகுதியில் இருந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தேங்காய் பஞ்சுகள் எரிந்து நாசமானது.