விழுப்புரம், செப்.1- செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் ஏரி உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய ப்பட்டு அப்பணி தொடங்கு வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி ஆட்சியர் அமீத் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.