districts

img

டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி,மொறப்பாக்கம், தண்டலம்,கழனிபாக்கம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தண்டலம் கிராமத்தில் டிராக்டரில் சென்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கா.சுந்தர் எம்எல்ஏ, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.தம்பு,  மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் எம்.எஸ் அர்ஜுன் குமார் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.