நியூஸ் கிளிக் நிறுவனர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை பறிக்ககூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கத்தினர் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே (நவ.6) திங்களன்று எஃப்ஐஆர் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.சாரங்கன் தலைமையில் மாவட்ட செயலாளர் கே.நேரு என்.நந்தகோபால், எஸ்.ஆனந்த் உள்ளிட்டோர் பல கலந்து கொண்டனர்.