திருவள்ளூர், அக். 23- மீஞ்சூர் அருகே கிராம மக்கள் சிபிஎம் தலைமையில், சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மவார்பாளையம், அண்ணா நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி களில் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவனங்க ளுக்கு நாள் தோறும் 100க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்க ளில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலை வழியாக பள்ளி-கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், நோயாளிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படு கின்றனர். குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கண்டெய்னர் லாரிகள் எப்போது தங்கள் மீது கவிழ்ந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் சாலையில் பயணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், பொன்னேரி-திருவொற்றி யூர் நெடுஞ்சாலையில் இருந்து கம்மவார் பாளையம் கிராமத்திற்குச் செல்லும் பராமரிப்பில்லாத சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திங்களன்று (அக் 21), நாற்று நடும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சிபிஎம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பாபு தலைமை தாங்கினார் . இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தா னம், மாவட்ட குழு உறுப்பினர் பி.கதிர்வேலு, ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், மாதர் சங்கத்தின் நிர்வாகி கவிதா, முன்னணி ஊழி யர்கள் நாகராஜ் , கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாரகு, மதிமுக மாவட்ட பிரதி நிதி பாபு, மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.