காஞ்சிபுரம், மார்ச்.3 - காஞ்சிபுரம் மாநக ராட்சிக்கு உட்பட்ட சாலை தெரு உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தை கடந்து செல்பவர்கள் கழிவு நீர் கசிவால் துர்நாற்றம் தாளாமல் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் மாநக ராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. தொற்றுநோய் பரவாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.