districts

சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்கள் விற்பனையம்

சென்னை, ஏப்.1- சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனையகம் சென்னையில் திறக்கப் பட்டுள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜூசி கெமிஸ்ட்ரி வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வணிக வளாகத்தில் இதனை திறந்துள்ளது. சருமபராமரிப்பு, தலை முடி பராமரிப்பு, மற்றும் உடல் பராமரிப்பு, அரோமா தெரபி, சிறார்களுக்கான பராமரிப்பு என பல்வேறு பிரிவுகளில் பொருட் கள் இங்கு காட்சிப்படுத்த ப்பட்டுள்ளன. கோவையில் தங்களது தயாரிப்புகளுக்கு மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து சென்னையில் புதிய  விற்பனையகத்தை திறந் துள்ளதாக ஜூசி கெமிஸ்ட்ரி இணை நிறுவனர் மேகா  ஆஷர் கூறினார். ஆர்கானிக் சருமப் பராமரிப்பு சந்தை யில் வேகமாக வளர்ந்து வரும் தயாரிப்புகளாக தங்க ளது பொருட்கள் உள்ளதாக வும் அவர் கூறினார். வருங்காலத்தில் ஆர்கா னிக் உணவுப்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.