districts

img

கார்போரண்டம் யூனிவர்சல் தொழிற்சங்க தேர்தல்

சென்னை, அக். 17- கார்போரண்டம் யூனிவர்சல் தொழிற்சங்க தேர்தலில் எஸ்.கே. மகேந்திரன் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூரில் உள்ள கார்போரண்டம் யூனிவர்சல் நிறுவனத்தில்  2024 - 2025ஆம் ஆண்டிற்கான தொழிற்சங்க தேர்தல் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கார்போரண்டம் யூனி வர்சல் தொழிலாளர் சங்கம் சார்பில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.கே.மகேந்திரன் போட்டியின்றி தொழிற்சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 3ஆவது முறையாக மகேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.