ராணிப்பேட்டை, செப். 20 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தலைவர் எஸ்.ஜோசப் கென்னடி தலைமையில் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் சனிக்கிழமை (செப் 20) நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.காந்திமதிநாதன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கு.புஷ்பராஜ் வேலை அறிக்கை யையும், பொருளாளர் ரா.பூபதி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, முன்னாள் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.முரளிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். மாநில பொதுச் செயலாளர் க.பிரபு பேர வையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் பா.உமாபதி வரவேற்றார். ந.சத்தியவேலன் நன்றி கூறினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணி களை முறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் காணொளி கூட்டங்கள் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வு மேற்கொள்வதை ரத்து செய்ய வேண்டும். குடும்பச் சூழல் காரணமாக மாவட்ட மாறுதல் கோரும் பணியாளர்களுக்கு உடனே மாறுதல் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். குற்ற குறிப்பாணை களுக்கு விரைவில் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர் மற்றும் அலு வலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக கு.புஷ்பராஜ், செயலாளராக ரா.பூபதி, பொருளாளராக பா.உமாபதி, மகளிர் குழு அமைப்பாளராக ச.ஷாலினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
