districts

img

பாழடைந்த கிணறு: அதிகாரிகள் ஆய்வு

சென்னை, ஜூலை 27 - சென்னை மாநகராட்சி தாண்ட வராயன் பிள்ளை (தா.பி) சத்திரத்தில் பாழடைந்த பொது கிணற்றை பார்வை யிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க உறுதியளித்தனர். அண்ணா நகர் தொகுதி, தா.பி.சத்திரம் 9வது குறுக்கு தெருவில் பொது  கிணறு ஒன்று இருந்தது. 50 வருடங்க ளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வந்த அந்த கிணறு பாழடைந்தது. ஆபத்தான நிலையில் இருந்த  அந்த கிணற்றை சுற்றி ஒரு வருடத் திற்கு முன்பு தகரத்தால் வேலி அமைக்கப்பட்டது. தற்போது தூர்ந்த கிணற்றில் குப்பை  கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள  மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி யானது. கிணற்றை சுற்றி உள்ள தடுப்பு  சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  எனவே, கிணறு உள்ள பகுதியை முழுமையாக இடித்துவிட்டு, அந்த இடத்தில் சமூக நலக் கூடம் அமைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஏ.சாந்தி,  செயலாளர் வி.தனலட்சுமி, கிளைச் செயலாளர் அமலா மற்றும் சிபிஎம் தலைவர்கள் த.சுகுமார், பி.சீனிவாசன், ஏ.பி.செல்வம், வாலிபர் சங்க தலை வர் ரங்கநாதன் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய  அதிகாரியிடம் மனு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில், வாரிய அதிகாரிகள் அந்த கிணறு அமைந்திருந்த பகுதி, அதனை சுற்றியுள்ள இடங்களை  ஆய்வு செய்தனர். கிணற்றில் குவிந்து  கிடக்கும் குப்பைகளை அகற்றி விட்டு, அரசின் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சிபிஎம் தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.