சென்னை, பிப். 7 - தேர்தல் நடத்தை விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஜன.30ந் தேதி தொடங்கி பிப்.4ஆம் தேதி வரை 4 கோடியே 90 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான பணம், பொருட்களை பறிமுதல் செய் துள்ளனர். பணமாக 3 கோடியே 54 லட்சம் ரூபாயும், 39 மடிக்கணினிகள், பரிசு பொருட்கள், புடவை கள் என ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பி லான பொருட்களும், 16 லட்சம் ரூபாய் மதிப்பி லான மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை தமிழ் ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது.