districts

img

மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை, ஜன.12- ஜனவரி மாதம் நாடு முழுவதும் ‘சாலை பாது காப்பு மாதமாக’ அனு சரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஜன 11 மற்றும் 12 ஆகிய  தேதிகளில் சென்னையில் ரெஃபெக்ஸ்  குழுமத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  தி.நகர் பசுல்லா சாலை சந்திப்பில் நடை பெற்ற இந்நிகழ்வில், ராமகிருஷ்ணா பள்ளி யின் மாணவர்களும் போக்கு வரத்து காவல்துறையின ரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.  சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை நம் நாட்டின் எதிர் கால சிற்பிகளான இளை யோரும், மாணவர்களும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படை யில் மாணவர்களின் பங்கேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஜனவரி 12-ம் தேதி யன்று ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் நடை பெற்ற நிகழ்வில், ரெஃ பெக்ஸ் குழுமத்தின் பணி யாளர்களும், உயரதிகாரி களும், சாலை பாது காப்பை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையிலேந்தி பங்கேற்றனர்.  சாலை பாதுகாப்பு என்ற தலைப்பு மீது பள்ளி குழந்தை களுக்காக படம்,  ஓவி யம் வரையும் போட்டியை யும் அடுத்த வாரம் நடத்த இக்குழுமம் திட்ட மிட்டிருக்கிறது என்று ரீஃ பெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்  அனில் ஜெயின் கூறினார்.