districts

img

மெமோரியல் ஹால் அருகே சாலையை கடக்க எஸ்கலேட்டருடன் சுரங்கப்பாதை

சென்னை, ஜன.31- சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக எஸ்க லேட்டருடன் சுரங்க நடைபாதை அமைக்கப் பட்டு உள்ளது. சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையை பொது மக்கள் எளிதில் கடந்து செல்வ தற்காக பூமிக்கடியில் 'எஸ்கலேட்டர்' வசதியுடன் நவீன சுரங்க நடைபாதை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது இந்த நவீன சுரங்க நடை பாதை பணிகள் நிறை வடைந்து உள்ளன.