districts

img

மழைநீர் தேங்குவதால் வீடுகளில் துர்நாற்றம் திருநின்றவூரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

திருவள்ளூர், டிச 8- கடந்த 6 நாட்களாக மழைநீர் தேங்கு வதால்  வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு,  சுகாதாரம் பாதிக்கப்பட்டு திருநின்றவூர் நகராட்சி பகுதியில் மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் நகராட்சியில் 14,15,16,17 ஆகிய வார்டுக ளில் உள்ள 2500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது மிக்ஜம் புயலால் மழையால் திருநின்றவூரில் உள்ள  மேற்கண்ட 4 வார்டுகள் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது.  வீடுகளில் 5அடி அளவிற்கு  மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் குடி யிருக்க முடியாமல் மக்கள் அவதிப்படு கின்றனர்.  கடந்த 6 நாட்களாக  தண்ணீரை வெளி யேற்றப்படாததால், தேங்கிய மழைநீர்  சாக்க டையாக மாறியுள்ளது. இதனால் வீடுகளுக் குள் போகவே முடியவில்லை. துர்நாற்றம் வீசுவதோடு. பாம்பு பல்லிகளின் மத்தியில் வாழும் நிலை உள்ளது.மேலும்  சுகாதாரம் பாதிப்பு ஏற்பட்டு மர்ம நோய்கள் உரு வாகும் சூழல் நிலவுகிறது.     சிபிஎம் வேண்டுகோள் ராட்சத மோட்டார் மூலம் தேங்கும் நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், திருநின்றவூர், பெரியார் நகர் அருகில் உள்ள ஈச ஏரியின் 4 மதகு களை முழுமையாக திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. திருநின்றவூர் நகராட்சி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வந்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளியன்று (டிச 8),  மனு அளித்தார். பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், இ.மோகனா, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், மாவட்ட குழு உறுப்பினர் பச்சையம்மாள் ஆகியோர் வெள்ளியன்று (டிச 8) நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.