districts

img

திரைப்பட தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

சென்னை,ஏப். 25 திரைப்பட தயாரிப்பில்  புரட்சியை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக பிரபல திரைப்பட இயக்கு னர் மணிரத்னம் தெரி வித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  “விஷமகக் காரன் 2020’’ என்ற திரைப் படத்தை தயாரித்து வரு வதாகவும் அவர் கூறி னார். ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பம் திரைப்பட தயாரிப்பு செலவை குறைக்க உதவும் என்று சென்னையில் திங்களன்று (ஏப்.25) செய்தி யாளர்களிடம் பேசிய அவர் கூறினார். இந்த Honey Flicks என்ற இந்த புதிய தொழில்நுட்பம் 19 கால்ஷிட்டுகளை 13 கால்ஷிட்டுகளாக குறைக் கிறது. இதனால்  40 சத விகிதம்செலவு குறைகிறது.  இந்த புதிய வகை தொழில் நுட்பத்தை தற்போதைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த  தயாரிப்பு நிறுவனங் கள்  மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். வெகு விரைவில் நாடு முழுவதும் தயாரிக்கப்படும் திரைப் படங்களிலும் இது பயன் படுத்தப்படும் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் நிர்வாகி டி.ஜி.தியாகராஜன் கூறி னார். விஜய் கே என்பவர்  தான் இந்த தொழில்நுட்பத்தி உருவாக்கி ,விஷமக்காரன் என்கிற திரைப்படத்தையும் அதில் உருவாக்கி அப்படத் தில் பிரதான வேடத்திலும் நடித்தும் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.