districts

img

புதுச்சேரியில் அங்கன்வாடிகளில் பணியாற்றி, ஆண்டு கணக்கில் ஓய்வு பெற்ற ஊழியர்

புதுச்சேரியில் அங்கன்வாடிகளில் பணியாற்றி, ஆண்டு கணக்கில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு  வழங்க வேண்டிய பணிக்கொடை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,  நிர்வாகி ஆனந்த கணபதி,செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம், சங்க நிர்வாகி விஜயா உள்ளிட்ட திரளான  ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.