தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று (பிப்.23) மாநிலம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் வி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இ.விஜயலட்சுமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராமநாதன், தென் மண்டல செயலாளர் என்.தீரமணி உள்ளிட்டோர் பேசினர்.