districts

img

சுடுகாட்டு பாதையில் தீண்டாமை வேலி அகற்றம்

செங்கல்பட்டு, அக். 12-  செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் கோட்டம், அச்சிறுப்பாக்கம் குறு வட்டத்திற்கு உட்பட்ட பொற்ப னங்கரணை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட வள்ளுவ ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 6 தலைமுறைகளாக தங்க ளது பகுதியில் இறந்த சடலங்களை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு கல்லியக்குனம் கிராமத்தை சார்ந்த அருணகிரி என்பவர் பெயரில் மேற்படி மயான பாதை உள்ளடக்கிய இடம் யூடி ஆர் மூலம் வழங்கப்பட்டது.  பட்டா வாங்கிய அருணகிரி காலமாகி விட்டார். இந் நிலையில் அவரது மகன் பாபு  என்பவர் கடந்த 1 வருட காலமாக மயான பாதையில் சடலங்களை எடுத்து செல்லக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து, மயான பாதையை உழுது பாதையின் வழித்தடத்தை அழித்துவிட்டார்.  மேலும் அப்பகுதி மக்கள் வாழும் ஒரு பகுதியில் தீண்டாமை வேலியை அமைத்துள்ளார்.  இந்து வள்ளுவ ஆதிதிராவிட மக்களுக்கு இந்த வழியை தவிர மயானத்திற்கு செல்ல வேறு எந்த பாதையும் இல்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிக ளுக்கு மனு கொடுத்தி ருந்தனர் இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு சமரச பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதற்கிடையே அப்பகுதியில் வசித்து வந்த புவனேஸ்வரி என்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலை யில் அவரது உடலை சுடு காட்டிற்கு எப்போதும் எடுத்துச் செல்லும் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டனர் இதற்கு நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மது ராந்தகம் கோட்டாட்சியர், வட்டாட்சி யர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி னர்   இந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை வேலியை சிறிதளவு அகற்றி மூதாட்டியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்தினர் மேலும் வருகின்ற அக்.16ஆம் தேதி இருதரப்புடன் சமரச பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்தனர். கோட்டாட்சியர் உடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் நிர்வாகிகள் முனி செல்வம், செந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.