districts

img

கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கையேடு

புதுச்சேரி, ஜூலை 3- கூட்டுறவு கல்வியியல் கல்லூரியின் கையேட்டினை முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் புதனன்று (ஜூலை3) வெளியிட்டார். புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் இரண்டாண்டு கல்வியி யல் பி.எட் பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வரு கிறது. நடப்புக் கல்வி யாண்டிற்கான (2024-25) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பட்டப் படிப்பு முடித்த மாண வர்களிடமிருந்து விண்ண ப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கல்லூரியின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவை யான நகல் சான்றிதழ்க ளுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிஎட் படிப்பின் சேர்க்கைக் கான கல்வித் தகுதிகள், கட்டண விபரம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய கையேட்டினை முதல்வர்  ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளி யிட்டார். இந்நிகழ்ச்சியில்  புதுச்சேரி கூட்டுறவு கல்வி யியல் கல்லூரி மேலாண் இயக்குநர் க.மாறன், நிர்வாகி  சாரங்கபாணி, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். ஜி.ஜி.தாமஸ் ஆகியோர் உடனிருந்தனர்.