திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெ.வைத்திலிங்கத்தை சிபிஎம் முன்னணி ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், ராமச்சந்திரன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன் ஆகியோரை ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர்.