மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பேரவை கூட்டம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம், நல்லாம் கிளினிக் ஆட்டோ கட்சி கிளையின் சார்பில் ரூ. 30,000 பெறுமானமுள்ள ஒலிபெருக்கியை கிளைச் செயலாளர் ஸ்டாலின் வழங்கினார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், நகரச் செயலாளர் மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன், கொளஞ்சியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.