districts

img

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ராணிப்பேட்டை, அக். 27 -  ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெள்ளியன்று (அக். 27) ஆட்சியர் ச. வளர்மதி வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் என். காசிநாதன், வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், திமுக நகர செயலாளர் பூங்காவனம், காங்கிரஸ் நகர செயலாளர் உத்தமன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று வரைவு பட்டியலை பெற்றுக் கொண்டனர். இதில் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாத்திமா, வரதராஜன், பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் முரளி, தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார் உடன் இருந்தனர்.