districts

img

பொது சுகாதார நிபுணர் டாக்டா் பி.குகானந்தம் உடல் நல்லடக்கம்

காலரா நோயை கட்டுப்படுத்த  போராடியவர் மருத்துவர் குகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மருத்துவா் பெ. குகானந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் என்பது மிக உன்னதமான மனிதம் போற்றும் துறை என்பதற்கான சான்றாக தம் வாழ்நாள் முழுவதும், அத்துறையில் அளப்பரிய சேவைகளை ஆற்றியவா் மருத்துவா் குகானந்தம்.  சென்னை மேயராக நான் இருந்த காலத்தில், சென்னை மாநகர சுகாதார அலுவலராகப் பணியாற்றிய மருத்துவா் குகானந்தம், மாநகர மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும், களப்பணிகளையும் எனக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவா். கடந்த 1992 ஆண்டு 1993 காலகட்டத்தில் சென்னையில் காலரா நோய் பரவிய போது, எளிய மக்களை அந்நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான செயல்திட்டங்களுடன், சிறப்பான களப்பணியை ஆற்றியவா்.  மனிதநேய மருத்துவரான குகானந்தம் மறைவால் வாடும் அவரது துணைவியார் , குடும்பத்தினா், உறவினா்கள், மருத்துவத்துறை சார்ந்த சக நண்பா்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 25- தொற்று நோய் சிறப்பு மருத்துவரும், பொது சுகாதார நிபுணருமான டாக்டர் பி.குகானந்தம் (68) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்களன்று காலமானார். நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவா் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அங்கு  நுரையீரல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், திங்கள்கிழமை அவா் உயிர் பிரிந்தது. மறைந்த டாக்டர் பி. குகானந்தத்துக்கு மனைவி டாக்டா் ஜலஜா மற்றும் இரு மகள்கள் உள்ளனர் மகள்கள் இருவரும் மருத்து வா்கள் என்பது குறிப்பிடத் தக்கது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அருகே உள்ள சூணாம்பேட்டினை பூா்விகமாகக் கொண்ட மருத்துவர் குகானந்தம், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும், சென்னை மருத்துவக் கல்லூரியில் டிபிஹெச் படிப்பை யும் நிறைவு செய்தார். அமெரிக்கா, பிரிட்டனில் தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சார்ந்த சிறப்பு படிப்பு களையும், எம்பிஹெச் முதுநிலை படிப்பையும் படித்தார். சென்னையில் உள்ள தொற்றுநோய் மருத்துவ மனை இயக்கு நராகவும், மாவட்ட தலைமை சுகா தார அதிகாரியாகவும் பல ஆண்டுகள் திறம்பட பொறுப்பு வகித்தவர் அவர். காலரா தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் புதிய வகையை கண்ட றிந்த பெருமையும் டாக்டர் குகானந்தனுக்கு உண்டு. அதற்கு ‘மெட்ராஸ் ஸ்ட்ரெயின்’ எனப் பெயரிப் பட்டது. அதேபோன்று, கொ ரோனா பெருந்தொற்று தொடங்கியபோது தமிழக அரசின் முதன்மையான மருத்துவ ஆலோசகர்களில் ஒருவராக இருந்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரும்பங்காற்றினார். மறைந்த மருத்துவா் குகானந்தத்தின் உடல் கீழ்பாக்கம் கல்ல றைத் தோட்டத்தில் செவ்வா யன்று நல்லடக்கம் செய்யப் பட்டது.