சென்னை, ஜூன் 25- பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்கிட தேவையான தளவாட பொருட்களை வழங்க வேண்டும் என்று மின் ஊழி யர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை திட்ட கிளை 16 வது மாநாடு சனிக்கிழமை யன்று (ஜூன் 25) சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்க வேண்டும். ஊழியர்களின் 23 வகையான சலுகைகளை பறிக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் குடிநீர், கழிப்பிடம் வசதிகளை மேம்படுத்த வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழி யர்களுக்கு தேவையான கணினி உள்ளிட்ட சாதனங் களை மாற்றி புதிதாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு திட்ட தலை வர் வி.சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலை வர் ஜி.மணவாளன் சங்க கொடியேற்றினார். அஞ்சலித் தீர்மானத்தை மயிலை கோட்ட தலைவர் எஸ் நிரு பன் சக்ரவர்த்தி வாசித்தார். தி.நகர் கோட்ட தலைவர் டி.பிரம்மாநாகலிங்கம் வரவேற்றார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை மாநாட்டை தொடங்கி வைக்க, திட்டச் செயலாளர் எஸ். கண்ணன் வேலை அறிக்கையும், பொருளாளர் எஸ்.முருக வேல் வரவு செலவு அறிக் கையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.தன லட்சுமி, சென்னை வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநிலச் செயலாளர் எம்.தயாளன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் கே.நட ராஜன், மின் துறை பொறியா ளர் அமைப்பு செயலாளர் ஆர்.ஆடரலசு மற்றும் கிளை செயலாளர்கள் ஜி.சத்திய மூர்த்தி (வடக்கு), எஸ்.தசரதன் (மேற்கு), எம்.முத்து (ஜிசிசி), எம்.செந்தில் குமார் (தலைமைய கிளை) உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. பழனி வேல் பேசினர். தி.நகர் கோட்ட செயலாளர் ஜெ. புண்ணிய கோட்டி நன்றி கூறினார். திட்டத் தலைவராக வி. சீனிவாசன், செயலாராக எஸ்.கண்ணன், பொருளா ளராக எஸ்.முருகவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.