சென்னை, பிப். 8 - மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும், நிதி ஒதுக்கீட்டில் தென் மாநிலங்களை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து வியாழ னன்று (பிப்.8) மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்தியசென்னை மாவட்டம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலா ளர் நே.சிற்றரசு, சட்டமன்ற உறுப்பி னர்கள் மருத்துவர் எழிலன், எம்.கே. மோகன், சென்னை மாநகராட்சி திமுக ஆளும் கட்சி தலைவர் ந.ராம லிங்கம், மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், ஆம்ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன், காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலை வர் சிவ.ராஜசேகரன், விசிக மையசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பா.வேலுமணி, மனித நேயமக்கள் கட்சி மத்தியசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் இ.எம். ரசூல், திமுக பகுதிச் செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, வினோத் வேலாயுதம், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முரு கேஷ், கே.முருகன், வெ.தனலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.
வடசென்னை
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் பி.டில்லிபாபு (காங்கிரஸ்), எம்.எஸ்.மூர்த்தி (சிபிஐ), எஸ்.கிரி (மதிமுக), நா.உஷாராணி (விசிக), குணங்குடி மொய்தீன் (மமக), அ.விஜயகுமார், கே.எஸ். கார்த்தீஷ் குமார், எஸ்.ராணி, வி.செல்வ ராஜ், பா.ஹேமாவதி (சிபிஎம்), ஐசிஎப் முரளி, சி.நாகராஜன், செ.தமிழ்வேந்தன், எம்.சாமிக் கண்ணு, க.ஜெயராமன், அ.முரு கன் (திமுக) உள்ளிட்டோர் பங்கேற்ற னர். வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இளையஅருணா, எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்), த.கு.வேம்புலி வெங்கடேஷ் (சிபிஐ), ராமதாஸ் (மதிமுக), சி.சவுந்தர் (விசிக), இ.எம்.எஸ்.அப்துல் சமது (மமக) ஆகியோர் பேசினர். பா.விமலா எம்.சி., வெ.ரவிக்குமார், எஸ்.பவானி (சிபிஎம்), எஸ்.ஜெக தாஸ் பாண்டியன், இரா.லட்சுமணன், இரா.செந்தில்குமார், வா.பெ.சுரேஷ் (திமுக) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாதவரம் மண்டலக் குழு அலுவலகம் அருகே சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், ஆர்.தாஸ் (காங்கிரஸ்), ச.இளங்கோவன் (விசிக), டி.சி.ராஜேந்திரன் (மதிமுக) ஆகியோர் பேசினர். எஸ்.பாக்கிய லட்சுமி, வீ.ஆனந்தன், வி.கமல நாதன், பாபு (சிபிஎம்), திருவொற்றி யூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, துக்காராம், நாராயணன், அருள்தாஸ், ஆறுமுகம், சரவணன் (திமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆவடி மாநகராட்சி அருகே சிபிஎம் பகுதிச்செயலாளர் அ.ஜான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் இரா.அந்திரிதாஸ், மயில்வாகனன் (சிபிஐ), இ.யுவராஜ் (காங்கிரஸ்), மு.ஆதவன் (விசிக), அஜீஸ் (மமக), முருகன் (திக), பி.நாக ராஜன் (த.பெ.தி.க) ஆகியோர் பேசினர். ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆர்.கோபி, ராபர்ட் ராஜ் (சிபிஎம்), சன் பிரகாஷ், பொன்.விஜயன், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணமூர்த்தி, வி.பேபி சேகர் (திமுக) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்சென்னை
தென்சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், ச.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, திக துணை பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கழக குமார், ப.சுப்பிரமணி எம்.சி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, விசிக தென்சென்னை மைய மாவட்டச் செயலாளர் ம.ஜேக்கப், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கி யம், கே.வனஜகுமாரி, எம்.சரஸ்வதி எம்.சி, சைதை பகுதிச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (திமுக), கே.வெங்கடேசன் (சிபிஎம்), கே.மணிகண்டன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.