குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இபிஎஸ்-95 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (நவ.16) திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை இபிஎப் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பி.பாபு, ஆர்.ஜெயராமன் எம்.சி. உள்ளிட்டோர் பேசினர்.