இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமாமேதை அம்பேத்கரை இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து உளுந்துர்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருவண்ணா மலையில் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா. தங்கராஜ், பரங்கிப்பேட்டையில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். வேலுர், திருப்பத்துர், ஓசூர், போச்சம்பள்ளிபட்டு ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் வட்டச் செயலாளர்கள், மாதர், வாலிபர் சங்கம், சிஐடியு மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.