districts

img

சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் மாநகராட்சி ஆணையருக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கடிதம்

சென்னை, ஏப். 10- சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தராஜன் சனிக்கிழமையன்று (ஏப்.9) பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையருக்கு எழுதி யுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளி யிட்டுள்ளது. இதற்காக அரசு தெரிவிக்கும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. கெரோனா பெருந் தொற்றாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் மீள முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். பெட்ரோல், டீசல், கேஸ், அத்தியாவசிய பொருட்கள் போன்வற்றின் விலை உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடி களால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலை யில் ஏழை, நடுத்தர மக்க\ ளின் சுமையை அதிகரிக்கும் வகையில் சொத்துவரி உயர்வை அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. மாநகராட்சிக்கு சொத்து வரி மட்டுமே பிரதான நிதி வருவாய் என்பது போன்று சித்தரிக்கப்படுகிறது. மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு மாறாக இதர வரிகளை கறாராக வசூ லிக்கவும், வரு வாயை உருவாக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். மேலும், மாநகராட்சி எல்லைக்குள் ஒன்றிய, மாநில அரசுகள் வசூலிக்கும் அனைத்து வரிகளிலிருந்தும் குறிப்பிட்ட தொகையை பங்கு தரும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாறாக, அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றக் கூடாது. சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.

;