districts

img

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது

சென்னை, டிச. 1 - மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் தமிழ்ச்செல்வனை புதனன்று (நவ.30) கைது செய்தனர். தூய தாமஸ் கலை, அறிவியல் கல்லூரி கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கிலம் இளங்க லை படிக்கும் மாணவிகளிடம், பேராசிரியர் தமிழ்ச்செல்வன் தொடுதல், ஆபாசமாக பேசுதல்; குறுஞ்செய்தி அனுப்புதல் என பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி செவ்வாயன்று (நவ.30) அன்று கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பேரா.தமிழ்ச்செல் ்வனை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பேரா. தமிழ்ச்செல்வன் மீது கல்லூரி நிர்வாகமே புகார்அளிக்கும், வீடியோ பதிவுடன் மாணவ பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசார ணைக்குழு அமைக்கப்படும் என கல்லூரி முதல்வர் உறுதி அளித்தார்.

இதற்கு மாறாக கல்லூரி முதல்வர் நடந்து கொண்டார். அதனைக் கண்டி த்து இரண்டாவது நாளாக புதனன்றும் (டிச.1) இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர் சங்கத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து விசாரித்தனர். இதனையடுத்து கல்லூரி முதல்வரின் புகாரின் அடிப்படையில்  பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2002 பிரிவு 4, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் பிரிவு - 67 ஆகியவற்றின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, பேரா. தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி, துணைச் செயலாளர் ப.க.புகழ்ச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;