districts

img

சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது

சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.அய்யப்பனுக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதனன்று (மார்ச் 6), வழங்கினார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.அய்யப்பன் ஏற்கெனவே நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.