சென்னை,ஆக.17-
இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப் 2023, கோல்ஃப் போட்டி சென்னையில் ஆக. 16 ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி தமிழ்நாடு கோல்ஃப் சம்மேளனத்தின காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் மொத்தத்தில் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
சென்னையில் கோல்ஃப் விளையாட்டிற்கான மைதானத்தை உருவாக்குவதற்கும் மற்றும் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துவதற்கும் தொடர்ந்து ஆதரவுஅளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிஜிடிஐ – ன் தலைமை செயல் அலுவலர் உத்தம் சிங் முண்டி, தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீர்ர் அமன் ராஜா, பார்த்தசாரதி ராமனுஜம் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.