districts

img

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு பாராட்டு

சென்னை, பிப். 16 - பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி 78ஆவது வட்ட கிளைச் செயலாளர்  எஸ்.சிவக்குமார்.  ஆட்டோ  ஒட்டுநரான இவர், ஆட்டோ சங்க (சிஐடியு) வெப்பேரி பகுதி தலைவராகவும் உள்ளார். இவரது ஆட்டோவில் பிப்.12 அன்று சூளைமேடு ரயில் நிலையம் அருகே கணவன், மனைவி, உள்ளிட்ட 4 பயணிகள் பைகளுடன் ஏறினர்.அண்ணா  நெடும்பாதையில் அவர்களை இறக்கிவிட்டு, வேறு சவாரிக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் மாலை ஆட்டோவை சுத்தம் செய்யும்போது ஆட்டோவின் பின்பகுதியில் ஒரு பை இருந்ததை எடுத்துள்ளார். அதனை கொண்டு சென்று திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவனிடம் ஒப்படைத்தார். அதில் தங்க நெக்லஸ், சரடு, வெள்ளி கொலுசுகள், பட்டுபுடவை என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் இருந்தன. இதனையடுத்து ஓட்டு நரின் செயலக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரி வித்தனர். இந்நிகழ்வின்போது கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு  உறுப்பினர் பி.கே.மூர்த்தி உடனிருந்தார்.