districts

சென்னையில் இன்று மின்தடை

சென்னை, மார்ச் 25- சென்னையில் சனிக்கிழமையன்று (மார்ச் 26)காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் – சிட்கோ நகர் துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பெரம்பூர் சிட்கோ நகர் பகுதிக்குட்பட்ட  ராஜமங்கலம் (1-8வது தெரு), பாபா நகர் (1-14வது தெரு), வடக்கு செங்குன்றம் சாலை, வடக்கு ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, தாதங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.