districts

img

சென்னையில் ஓய்வூதியர்தினக் கூட்டம்

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனிக்கிழமையன்று (டிச.17) சென்னையில் ஓய்வூதியர்தினக் கூட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில செயலாளர் சி.கே.நரசிம்மன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய உதவி பொதுச்செயலாளர் கே. ராகவேந்திரன், அனைத்திந்திய பிஎஸ்என்எல் தொலைபேசி ஓய்வூதியர் சங்க சென்னை மாநில செயலாளர் ஆர். கோவிந்தராஜ்,  தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர், தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ஆர். இளங்கோவன், அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்க சென்னை மாவட்ட செயலாளர் ஜி.குமார், தலைவர் டி.மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர். அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ்  ஓய்வூதியர் சங்க மத்திய பொருளாளர் சி. சேகர் நன்றி கூறினார்.