districts

img

தண்ணீரில் மிதக்கும் பரணிபுத்தூர்

காஞ்சிபுரம், டிச. 10 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்க, மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பட்டு-பரணிபுத்துர் தெருக்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல்  தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லை யான ஐயப்பன் தாங்கல் ஊராட்சி மற்றும் போரூர் வழியாக செல்லும் திருச்சி தேசியநெடுஞ்சாலை அருகில் பரணி புத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் கடந்த மழைக் காலங்களில் மழைநீர் தேக்கியது இல்லை எனவும், மழைநீர் தேங்கியதற்கு  மழைநீர் கால்வாய்  அமைக்கும் பணியில் உள்ள குறைபாடே காரணம் என  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க பரணிபுத்தூர், ஐயப்பன் தாங்கலை இணைத்து சுமார் 500மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று அனகாபுத்தூர் ஆற்றில் விடக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கால்வாய் உயரமாக இருப்பதால் இங்கு மழைநீர் தேங்கியுள்ளது என அப்பகுதியில் குடியிருப்போர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்க ளாகத் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர். தகவலை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் சம்மந்தப்பட்ட  இடத்தை பார்வை யிட்டு அவர் கூறியதாவது: இந்த  பரணிபுத்தூர் பழமையான கிராம மாகும், பல்வேறு மழைக் காலங்களில்  தண்ணீர் தேங்காமல் சென்றுள்ளது.  இந்நிலையில் மாங்காடு நகராட்சி புதியதாக உருவாக்கப்பட்டது. நகரமயமாக்கல் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு வகையான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையால்  மழைநீர்  ஒரு வாரக் காலமாகத் தேங்கியுள்ளதால்  துர்நாற்றம் வீசுகிறது. இதனால்  சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்  உள்ளது. இங்குள்ள மக்க ளுக்கும், குழந்தைகளுக்கும் முறை யான மருத்துவ முகாம்கள் அமைத்து அரசு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தானாகச் செல்ல வேண்டிய மழைநீரை மோட்டர் வைத்து அப்புறப்படுத்த வேண்டிய நிலை பரணிபுத்தூர் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய முறை யில் கால்வாய்கள் அமைத்து மழைநீரை அனகாபுத்தூர் ஆற்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் இவ்வாறு சங்கர் கூறினார்.  முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சி.சங்கர் தலைமையில் செயற் குழு உறுப்பினர் பி.ரமேஷ், குன்றத்தூர் வட்டச்செயலாளர் கே.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர்.