districts

img

சமாதான தினத்தை முன்னிட்டு  உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

சென்னை, செப். 16- செப்டம்பர் 21 உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பரப்பும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதுகுறித்து அமைப்பின் இயக்குநர் டாடி ஜோ, தலைவர் புவனேஸ்வரி இப்ரா`ஹிம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக சமாதான தினத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 21 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் உலக சமாதானத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் ஆயிரக்கணக்கான ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு 30 நாட்களுக்கு “ஒப்பனை கலை உலக சாதனை நிகழ்ச்சி” நடைபெற உள்ளது. உலக சாதனை புத்தகமான அசிஸ்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புதுச்சேரி இந்த உலக சாதனை நிகழ்ச்சியை அங்கீகரிக்க உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஒப்பனை கலைஞர்கள் சமாதானத்தை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிற உடையுடன் பங்கேற்பார்கள். இதில் பங்கு பெறுபவர்களுக்கு 99 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

;